மேலும் செய்திகள்
மினி பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
16-Feb-2025
பல்லடம்; பல்லடத்தில், குடிபோதையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில், போலீசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.மேற்கு பல்லடத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ், 20. தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் நந்தகுமார், 23 மற்றும் 4 பேர், மது அருந்திவிட்டு, பிரகாஷை தேடிச்சென்று தாக்கினர். இதில் காயமடைந்த பிரகாஷ், பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த தாக்குதலுக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என்று விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.
16-Feb-2025