அவிநாசியில் ஒரு மாதம் உடல் பரிசோதனை முகாம்
அவிநாசி : அவிநாசி, பழனியப்பா பள்ளி அருகில், மாமரத்தோட்டம், கச்சேரி வீதியில் உள்ள, அவிநாசி குவாலிட்டி ஸ்கேன்ஸ் மற்றும் தைரோகேரில், முழு உடல் பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது.முகாமில் கொழுப்பு, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின், இதயம் உள்ளிட்ட, 28 வகை பரிசோதனைகள், 60 சதவீதம் சிறப்பு சலுகையில் மேற்கொள்ளப்படுகிறது; பரிசோதனைக்கு கட்டணம், 1,499 ரூபாய்.நேற்று துவங்கிய இம்முகாம் வரும், அக்., 4ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.மேலும் தகவல்களுக்கு 99408 62226 என்ற எண்ணில் அழைக்கலாம் என அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.