மேலும் செய்திகள்
நாளை ஆடு வளர்ப்பு பயிற்சி
06-Aug-2024
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, பொங்கலுார் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், 'அங்கக வேளாண் உற்பத்தியாளர்' என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு நேரடி பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. விருப்பம் உள்ள திருப்பூர் மாவட்ட விவசாயிகள், தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 25 விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், முன்னுரிமை அடிப்படையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்கள் என, 26 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிவில் அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. விருப்பம் உள்ளவர்கள், 96559 58099 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாகவோ, எஸ்.எம்.எஸ்., வாயிலாகவோ தங்கள் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த மாதம், 4ம் தேதி பயிற்சி துவங்குகிறது.இத்தகவலை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.அங்கக வேளாண்மைப் பயிற்சி மூலம் வேளாண் தொழில்முனைவோராகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
06-Aug-2024