உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அசல் மதிப்பெண் சான்று  

அசல் மதிப்பெண் சான்று  

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26 முதல் ஏப்ரல், 8ம் தேதி வரை நடந்தது. மே, 10 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. மாவட்டத்தில், 30, 180 பேர் தேர்வெழுதினர்; இவர்களில், 13, 220 மாணவர், 14, 659 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில், 1,490 பேரும், மாணவியரில், 811 பேரும் என, 2,301 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தேர்வெழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், வரும், 29ம் தேதி வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ