உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் வழிந்த குடிநீரில் காகித கப்பல்

ரோட்டில் வழிந்த குடிநீரில் காகித கப்பல்

பல்லடம்; பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அத்திக்கடவு, பில்லுார் கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில், என்.ஜி.ஆர்., ரோட்டில், குடிநீர் குழாய் உடைந்து,தண்ணீர் ரோட்டில் வழிந்தோடியது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில், குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், வீணடிக்காமல் சேகரித்து வைக்க வேண்டியதும் அவசியமாகிறது.இதுகுறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம், குடிநீரை வீணடித்து வருகிறது.என்.ஜி.ஆர்., ரோட்டில், அத்திக்கடவு பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு முறை குடிநீர் வினியோகிக்கப்படும் போதும், என்.ஜி.ஆர்., ரோட்டில் குடிநீர் வீணாகி வாய்க்கால் போன்று ரோட்டில் ஓடுகிறது. பல நாட்களாக குழாய் உடைத்து சரிசெய்யப்படாமல் உள்ளது.குடிநீரின் அவசியம் கருதி, நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து அலட்சியம் காட்டாமல், குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, குடிநீர் வீணாவதை கண்ட சமூக ஆர்வலர்கள், ரோட்டில் வழிந்து ஓடிய தண்ணீரில் காகிதக் கப்பல் விட்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ