பென்சனர்கள் கூட்டமைப்பு மடத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம்
உடுமலை; மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.செயலாளர் நாகராஜன், துணைச்செயலாளர் கோபால், பொருளாளர் பாண்டுரங்கன், துணைத்தலைவர் தண்டபாணி, பொன்னுசாமி, உடுமலை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள், சாமிநாதன், இராமமூர்த்தி, அனைத்து துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கம் செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கினர். இதில், 60க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.