முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிக்க மக்கள் வலியுறுத்தல்
உடுமலை: உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், முறைகேடானா குடிநீர் இணைப்புகளைஅகற்ற ஒன்றிய நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை ஒன்றியத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்க வேண்டுமென ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும், தேவைக்கு அதிகமாக குடிநீர் பயன்படுத்துவதற்கும், கூடுதல் இணைப்பு பெறுவதற்கும் முறைகேடாக, அனுமதியில்லாத எண்ணிக்கையில் குடிநீர் இணைப்பு எடுப்பது நடக்கிறது.குறிப்பாக, மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில், இந்த அவலம் தொடர்கிறது. இதனால், தேவையான அளவு குடிநீர் வினியோகம் இருப்பினும், பற்றாக்குறை ஏற்படுகிறது.ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சிகளில் ஆய்வு நடத்தி, முறைகேடான குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.