மேலும் செய்திகள்
குறைகள் தீரும்; நம்பிக்கை குறையாத மக்கள்
20-Aug-2024
திருப்பூர்:பல்லடம் நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் ஆகியோர் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை அளித்த மனு: பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பஸ் ஸ்டாண்டில், 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, டூவீலர் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதில், 30 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. புதிய டூவீலர் ஸ்டாண்ட் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் ஏலம் விடாமல் வைத்துள்ளனர்.ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு, குறைந்த ஏல தொகைக்கு டூவீலர் ஸ்டாண்டை விடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனால், நகராட்சிக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.டூவீலர்களை நிறுத்த இடமின்றி, வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். பல்லடம் நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்படுவதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடவேண்டும்.தீனுல் இஸ்லாம் மஜீத் அண்டு மதரசா, பாரதி நகர் சுன்னத் ஜமாத் சார்பில் அளிக்கப்பட்ட மனு: திருப்பூர் மாநகராட்சி 4 மற்றும் 5 வது வார்டுக்கு உட்பட்ட சமத்துவபுரம், பாரதிநகர், குமரன் காலனி, திருக்குமரன் அபார்ட்மென்ட், நெருப்பெரிச்சல், வாவிபாளையம், குருவாயூரப்பன் நகர் பகுதிகளில் 500 இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கிறோம். எங்கள் பயன்பாட்டுக்கு, அடக்க ஸ்தலத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்கவேண்டும்.திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்த கண்ணதாசன் அளித்த மனு: பாரப்பாளையத்திலுள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அயர்னிங் பிரிவில் பணிபுரிந்து வந்தேன். 2023, அக்., 9ம் தேதி, பாய்லர் வெடித்த விபத்தில், இவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வேறு வேலைக்கு செல்லமுடியாதநிலையில், ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். வெறிச்சோடிய வளாகம்
கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்ட நாளான திங்கள்கிழமைகளில், நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்டு மனு அளிப்பது வழக்கம். ஆனால், நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க, மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் வந்தனர். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம் மற்றும் மனுக்கள் பதிவு நடைபெறும் போர்டிகோ பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டதால், கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமிக்கப்படவில்லை.
20-Aug-2024