உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பகல் நேர பாதுகாப்பு மையங்களில் பிசியோதெரபி நிபுணர் நியமிக்கணும்

பகல் நேர பாதுகாப்பு மையங்களில் பிசியோதெரபி நிபுணர் நியமிக்கணும்

உடுமலை:மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல்நேர பாதுகாப்பு மையங்களில், பிசியோதெரபி தற்காலிக பயிற்சியாளர்கள் நியமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு வட்டாரத்திலும், பள்ளி செல்லும் வயதிலுள்ள மாற்றுத்திறன் மாணவர்களை பராமரிப்பதற்கும், அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும் பகல்நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.உடுமலை மற்றும் குடிமங்கலத்தில் தலா ஒன்று உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக 13 மையங்கள் உள்ளன. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதிட்ட சிறப்பாசிரியர்கள் இதன் பொறுப்பாளர்களாக உள்ளனர்.மாணவர்களுக்கு இந்த மையத்தில் மனநலம் சார்ந்த பயிற்சிகள் மட்டுமின்றி, அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கு, பிசியோதெரபி பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.பிசியோதெரபி சிகிச்சைக்கு தற்போது பணியிடங்கள் காலியாக இருப்பதால், அந்த பயிற்சி இரண்டாண்டுகளாக முடங்கியுள்ளது.பெற்றோர் கூறியதாவது: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதில் அரசு அலட்சியமாக உள்ளது.அவர்களுக்கு உடல்நலம் மேம்படும் வகையில், பிசியோ பயிற்சி அளிப்பதற்கு பயிற்சியாளர்கள் நியமிக்க வேண்டும்.பணியிடங்கள் நிரப்பப்படும் வரை, தற்காலிமாக பயிற்சியாளர்கள் நியமிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ