உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாக்கிலிட்டு கொல்லப்பட்ட நாய்கள் போலீசில் புகார்

துாக்கிலிட்டு கொல்லப்பட்ட நாய்கள் போலீசில் புகார்

திருப்பூர்:மூலனுார் அடுத்துள்ள முளையாம்பூண்டி, கோவில்மேட்டுப்புதுார் அருகே உள்ள முத்துசாமி கோவில் பகுதியில், இரண்டு தெருநாய்களை, கொடூரமாக துாக்கிலிட்டும், அடித்தும் சிலர் கொன்றுள்ளனர்.கிட்டுசாமி, 75 என்பவரின் வளர்ப்பு நாய், மற்றொரு தெருநாய் என, இரு நாய்களையும் துாக்கிலிட்டு கொன்றுள்ளனர். இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மூலனுார் போலீசிடம் புகார் அளித்துள்ளார்.சிலர் கூட்டாக சேர்ந்து, 24ம் தேதி மதியம் 2:00 மணிக்கு, நாய்களை வேப்பமரத்தில் துாக்கிலிட்டு, கட்டையால் அடித்து கொன்றுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !