உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விசைத்தறி வளர்ச்சிக்கு தீர்வு காணப்படும் :அண்ணாமலை பதிலால் விசைத்தறியாளர் நம்பிக்கை

விசைத்தறி வளர்ச்சிக்கு தீர்வு காணப்படும் :அண்ணாமலை பதிலால் விசைத்தறியாளர் நம்பிக்கை

பல்லடம்;வெறும் தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் தராமல், விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு தீர்வு இதுதான் என, அண்ணாமலை விளக்கியது, விசைத்தறியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை இரண்டு முறை பிரசாரம் செய்துள்ளார்.பல்லடம் வட்டார பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் போது, தொழில் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து, அண்ணாமலை ஆழமாக பேசி வருகிறார். இவ்வாறு, பல்லடம் அருகே இச்சிப்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, விசைத்தறியாளர்கள் பலர் அண்ணாமலையை சூழ்ந்து கொண்டு, தொழிலை காப்பாற்றும்படி மன்றாடினர்.பெண்கள் சிலர், எங்களது வாழ்வாதாரமே இதுதான் என்றும்; கடந்த பத்து ஆண்டுகளாக விசைத்தறி தொழிலை காப்பாற்ற எந்த வகை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். விசைத்தறியாளரின் ஆதங்கத்தை கேட்ட அண்ணாமலை அளித்த விளக்கம் அனைவரையும் கவர்ந்தது.மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:விசைத்தறி தொழிலை காப்பாற்ற வேண்டும் எனில், ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். பவர் டெக்ஸ் இந்தியா திட்டம், நுால் வங்கி திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்து, விசைத்தறிகளில் சோலார் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும். ஒரு சங்கிலி தொடராக உள்ள இவற்றையெல்லாம் செய்தால்தான் விசைத்தறி தொழில் வளர்ச்சி பெறும். இதற்கு, குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது அவகாசம் வேண்டும்.வெறும் வாக்குறுதியை மட்டும் அளித்து விட்டு செல்ல முடியாது. மேற்கூறியவற்றை சரி செய்தால் விசைத்தறி தொழில் தானாக வளர்ச்சி பெறும். இதற்கு லோக்சபா தேர்தலில் என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.இவ்வாறு, அண்ணாமலை விளக்கம் அளித்தது, விசைத்தறியாளர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ