பிரதமர் மோடி பிறந்தநாள் ரத்ததான முகாம்
அவிநாசி : திருப்பூர், திருமுருகன்பூண்டி மண்டல பா.ஜ., மருத்துவ அணி சார்பில், ரத்த தான முகாம் நடைபெற்றது. அதில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்று, முகாமை துவக்க வைத்து ரத்த தானம் செய்தார். பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், 74 பேர் ரத்த தானம் செய்தனர்.