உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை தாருங்கள்

அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை தாருங்கள்

திருப்பூர்;மாவட்ட அளவிலான, வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.மத்திய, மாநில அரசு திட்டங்களில் நடந்து வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, துறைவாரியாக ஆலோசிக்கப்பட்டது. மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை செய்ய வேண்டும். அரசு திட்டம், தகுதியான பயனாளிகளுக்கு சரியாக சென்றடைய வேண்டும்.அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, மக்கள் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி