உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயற்கை கால் அளவீடு முகாம்

செயற்கை கால் அளவீடு முகாம்

திருப்பூர்:திருப்பூர் சக் ஷம் அமைப்பு சார்பில், செயற்கை கால் அளவீடு முகாம், நாளை நடக்கிறது.திருப்பூர் சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை அவயம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, பூச்சக்காடு, செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில், செயற்கை கால் அளவீடு செய்யும் முகாம், நாளை நடக்கிறது.காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், செயற்கை கால் தேவைப்படுவோர், போட்டோ, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 93630 32998, 94422 25500 என்ற எண்களில் அணுகலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !