உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே கால அட்டவணை இனி ஜனவரியில் வெளியீடு

ரயில்வே கால அட்டவணை இனி ஜனவரியில் வெளியீடு

திருப்பூர்:ஜூன் மாதத்துக்கு பதிலாக, ஆண்டுதோறும், இனி ஜனவரி மாதம் ரயில்வே புதிய கால அட்டவணை வெளியிடப்பட உள்ளது.பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய ரயில்கள், ரயில் நேர மாற்றம், சேவை நீட்டிப்பு மற்றும் குறைப்பு குறித்த மாறுதல்களுடன் ஆண்டு தோறும் புதிய ரயில்வே கால அட்டவணை ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும்.பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் பட்ஜெட் என்பதால், அதற்கு அடுத்த மூன்று மாதம் கழித்து புதிய கால அட்டவணை தயாரித்து, ரயில்வே வாரியம் வெளியிட்டு வந்தது. இந்தாண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தும், புதிய ரயில்வே கால அட்டவணை வெளியாகவில்லை.இந்நிலையில், 2025க் கான கால அட்டவணை ஜனவரியில் வெளியிடப்படும். முந்தைய அட்டவணை 2024 டிச., 31 வரை தற்போதைய நிலையில் மாற்றமில்லாமல் தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இனி ரயில்வே கால அட்டவணை ஜனவரியில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை