உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மறுசுழற்சி தொழில்நுட்ப ஆடைகள் அணிவகுப்பு

மறுசுழற்சி தொழில்நுட்ப ஆடைகள் அணிவகுப்பு

திருப்பூர்;திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஐ.கே.எப்., மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில், 51வது கண்காட்சி, மூன்று நாட்கள் நடந்தது.தமிழக அரசின் ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கண்காட்சியை திறந்து வைத்து, பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி குறித்து வெகுவாக பாராட்டினார்.

சீன 'ஸ்டோன்' ஆடைகள்

கண்காட்சியில், பிரின்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் தொழில்நுட்பம் கலந்த 'டி-சர்ட்'கள், சீனா இறக்குமதி 'ஸ்டோன்' பதித்த 'பார்ட்டி வேர்' ஆடைகள், கப்பல்படை, ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கான சீருடைகள், பொறியியல் பிரிவினர், தீயணைப்புத்துறையினர் பயன்படுத்தும் ஆடைகள், பாதுகாப்பு ஜவுளி உபகரணங்கள் இடம் பெற்றிருந்தன.

மறுசுழற்சி தொழில்நுட்ப ஆடை

மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள், மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கான அசசரீஸ் அணிவகுத்தன. கடந்த மூன்று நாட்களாக, இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் பங்கேற்று, வர்த்தக விசாரணை நடத்தியுள்ளன.மூன்றாவது நாளான நேற்று, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

புதிய வளர்ச்சி

பெங்களூருவை சேர்ந்த வர்த்தக முகமை செயல் இயக்குனர் விஜய் அதானி கூறியதாவது: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு, வர்த்தக முகமை நடத்தி வருகிறோம். நீண்ட காலமாக, திருப்பூருடன் வர்த்தக தொடர்பு உண்டு. எங்கள் நிறுவனம், அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள வர்த்தகர்களிடம் ஆர்டர்களை பெற்று, திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு வழங்கி வருகிறது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடத்தும், ஐ.கே.எப்., கண்காட்சி, புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியானது, அபார வளர்ச்சி பெற்றுள்ளது.எங்களது வாடிக்கையாளரான, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், கண்காட்சியை பார்வையிட்டு, அதிசயித்து போயுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை