ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
உடுமலை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க, உடுமலை வட்டார கிளை அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. சங்க துணைத்தலைவர் ரகோத்தமன் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களின் காப்பீட்டுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குதல் வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் பலர் பங்கேற்றனர். பொருளாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.