| ADDED : ஏப் 26, 2024 12:14 AM
திருப்பூர்;ரேவதி அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2 தேர்வர்களுக்கு, 'வெற்றி நிச்சயம் 2024' எனும் முப்பெரும் மருத்துவ கல்வி வழிகாட்டி விழா வரும் 27ம் தேதி அவிநாசி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ரேவதி நிறுவனத்தில் நடக்கிறது.பிளஸ் 2 வகுப்புக்கு பின், என்ன, எங்கு, எப்படி படிக்கலாம் என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை வழங்க உள்ளார். துணை மருத்துவ படிப்புகள், அதில் உள்ள பல்வேறு வகையான வேலை வாய்ப்பு, பாடங்கள் குறித்த கண்காட்சி நடைபெற உள்ளது.கண்காட்சியை, 27 முதல் மே 7ம் தேதி வரை காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, மாணவர்கள் கண்டுகளிக்கலாம். 'ரைஸ்' கல்வி உதவித்தொகை தேர்வு ஏப்., 27ம் தேதி மதியம், 2:00 முதல், 3:30 மணி வரை நடக்கிறது.பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் குறித்த வினாக்கள் இடம் பெறும். முதல், மூன்று மதிப்பெண் எடுப்பவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து, 25 சதவீத சலுகையும், 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு, 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட உள்ளதாக, ரேவதி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளனர்.