ரூ. 41 லட்சம் ரூபாய் சுருட்டல்; சைபர் கிரைம் போலீசில் புகார்
திருப்பூர்; திருப்பூரில், பங்குச்சந்தை முதலீடுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, 41 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியது.திருப்பூர், மங்கலம் ரோட்டை சேர்ந்த, 52 வயது நபர். இவருக்கு கடந்த டிச., மாதம் 'வாட்ஸ்அப்பில்' தொடர்பு கொண்ட ஒருவர், பங்குசந்தை வர்த்தகம் தொடர்பான தளத்தை அறிமுகப்படுத்தினார். அதில், பல மடங்கு லாபம் எடுக்கலாம் என கூறியதால், குழுவில் இணைந்தார். பல தவணைகளாக, 41 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். லாப தொகையை எடுக்க முயன்ற போது, கூடுதலாக சில லட்சங்களை செலுத்த கூறினர். தொடர்ந்து பணம் கட்ட வற்புறுத்திய போது, சைபர் மோசடி கும்பல் ஏமாற்றியது தெரிந்தது. புகாரின் பேரில், திருப்பூர் மாநகர 'சைபர்' கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.