உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்.எஸ்.எஸ்., குழுவினர் உறுதி

ஆர்.எஸ்.எஸ்., குழுவினர் உறுதி

அவிநாசி: நேற்று அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பச்சாம் பாளையம் பிரிவில் உள்ள நரிக்குறவர் காலனியில் ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத செயற்குழு உறுப்பினர் துர்கா தாஸ் (மகாராஷ்டிரா), தென்பாரத செயற்குழு உறுப்பினர் ஆனந்த ரகுநாதன், பிரேரணா அறக்கட்டளை ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, மோகன், பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜ் ஆகியோர், இக்காலனியில் வசிப்போரின் வாழ்க்கை முறையை பற்றி கேட்டறிந்தனர்.அவர்கள் வசிக்கும் வீட்டை ஆய்வு செய்து போதிய அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருவதாகவும், வீடு இல்லாதவர்களுக்கு அரசிடம் கோரிக்கை விடுத்து காலியிடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி