பள்ளி ஆண்டு விழா; மாணவர்கள் உற்சாகம்
திருப்பூர்; திருப்பூர், முத்துப்புதுார் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.பள்ளியின் ஆண்டு விழா, கலை கண்காட்சி மற்றும் அறிவியல் கண்காட்சி ஆகிய முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியர் அன்புச்செல்வி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சவுந்தரராஜன் அறிவியல் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். மயூரிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். முன்னாள் மாணவர்கள் வேணி, செல்வம், ரவி, வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடந்தது.l இதேபோல, திருப்பூர், பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் அருணா வரவேற்றார். கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுவினர், பகுதி முக்கிய பிரமுகர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. கலை இலக்கிய மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.