உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செப்., 5 ஆசிரியர் தின சிறப்பு பேட்டி

செப்., 5 ஆசிரியர் தின சிறப்பு பேட்டி

தலைமைப்பண்பு வளர்க்க என்.சி.சி., பங்களிப்பு

லதா மாதேஸ்வரி, ஆசிரியர், என்.சி.சி., அலுவலர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: மாணவர்களைப் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றுதல் மற்றும் நாட்டுப்பற்றை ஊட்டுவதன் மூலம் ஆசிரியர்கள், தேசக்கட்டமைப்பில் முக்கியப் பங்காற்றுபவர்களாக இருக்கிறோம். மாணவியரிடம் தேசப்பற்றை வளர்க்க வேண்டும். அவர்கள் சமூக நலப்பணியை விரும்ப, மரம் நடுதல், சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும். என்.சி.சி.,யில் இணைந்து, பணியாற்றும் போது சீருடை அணிந்தவுடன் ஒரு கம்பீரம் வரும். பிறருக்கு உதாரணமாக, திகழ உதவும்.என்.சி.சி.,யில் இணைந்தவர்கள் ஒற்றுமையாக, தைரியமாக உள்ளனர்; தலைமைப்பண்பு வளர்கிறது. மாணவியருக்கு அமைதி சூழலை உருவாக்கவும், விரைவான, விவேகமான நடவடிக்கை எடுக்கவும் திறன் தேவை. அதைத்தான் 'பிரசன்ஸ் ஆப் மைண்ட்' என்கிறோம். இது இருந்தால், உடனே பணியாற்ற துவங்கி விடுவர். அதை கற்றுத்தர வேண்டும். முடியாது என நினைத்து இணைபவர்களை கூட, உங்களால் முடியும் என்பதை என்.சி.சி., உணரச்செய்யும். மனதில் நினைப்பதை லட்சியமாக மாற்றிக் கொண்டு, சாதிக்க என்.சி.சி., ஆசிரியருக்கும் மாணவருக்கும் உதவுகிறது. வழி இது தான் என காட்டுவது தான் பெரிய சந்தோஷம். அதை கற்றுக்கொடுப்பதை பெருமையாக கருதுகிறேன்..................தமிழ் கற்பித்தல் உணர்வுபூர்வப் பணிஆழ்வை கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர், தமிழகத் தமிழாசிரியர் சங்கம்: ஐந்தாம் வகுப்பு முதலே எழுதக் கற்றுக்கொடுத்தால் தான் தமிழ்ப் பயிற்சி கிடைக்கும். ஆங்கிலக்கல்வி காரணமாக, தமிழ் மீது நாட்டம் குறைந்து, எட்டாம் வகுப்பில் வந்து தமிழ் எழுதவே திணறுகின்றனர். எழுத்தே தெரியவில்லை. கை பிடித்து தமிழ் எழுத வைத்து, புத்தகத்தில் கைவைத்து ஒவ்வொரு மாணவருக்கும் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும். சொல்வதை திரும்ப சொல்லி, புத்தகத்தை பார்த்து படிக்கும் வகையில் தமிழ் கற்றுத்தர வேண்டும். தமிழ் மீது பற்றே இல்லை.ஆங்கிலக்கல்வி பயிலும் பலருக்கு தமிழ் எழுத, வாசிக்கக்கூட தெரிவதில்லை. உயிரெழுத்து, மெய்யெழுத்து, இலக்கணம், எழுத, பேச கற்றுத்தர வேண்டியுள்ளது. தமிழில் செயல்வழி கற்றலைக் கொண்டு வர வேண்டும். எழுதுதல், பேசுதல், கற்றல் ஆகிய வாய்மொழித்தேர்வு அவசியம். அப்போது தான், தமிழில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழ்மொழி மீது உணர்வும், பற்றும் ஏற்படும்.அனைத்துப் பள்ளி தமிழ் ஆசிரியர்களும் உணர்வுபூர்வமாக இப்பணியை எடுத்துச் செய்ய வேண்டும். பள்ளிகளில் வாசிப்பு மன்றம் உருவாக்க வேண்டும். தினசரி தமிழ்ச் செய்தித்தாள் வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழில் தேர்வெழுத கஷ்டபடமாட்டார்கள்.----------------------------ஆசிரியருக்கு சவால் மிக்க இன்றைய சமூகச் சூழல்ஜெயபால், மாவட்ட செயலாளர்(ஊடகம்), தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு: பல்வேறு வடிவங்களில் சவால் நிறைந்ததாக ஆசிரியர் பணி மாறி வருகிறது. எழுத்தறிவு, படிப்பறிவு இரண்டையும் முழுமையாக கற்றுத்தருபவராக ஆசிரியர் இருக்க வேண்டும். மாணவரைப் புரிந்து கொள்ள வேண்டும். தவறான பழக்கங்களில் இருந்து அவர்களை மீட்டெடுத்து, கல்வியைப் போதிக்க வேண்டும். கல்வி மற்றும் விளையாட்டில், ஊக்கம் தருபவராக ஆசிரியர் இருக்க வேண்டும். அடித்து படிக்க வைத்த காலம் மாறி, அளவோடு கண்டிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய சமுதாய சூழல் அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்குப் பெரிய சவாலாக உள்ளது. தனியார் பள்ளி - அரசு பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர் இடையே வேறுபாடுகள் நிறைய உள்ளன. பெற்றோர் ஒத்துழைப்பை எல்லா இடங்களிலும் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. மாணவர்கள் பலரும் முழுமையாக ஒத்துழைப்பு தருவதில்லை.-------------------------------------புதிய தொழில்நுட்பங்கள் கற்றுக்கொள்வது அவசியம்பாலசுப்ரமணியம், திருப்பூர் வடக்கு வட்டாரச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி: தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பை ஒரு வழக்கமாகவே ஆசிரியர் கொண்டிருக்க வேண்டும். ஏ.ஐ., உட்பட தொழில்நுட்பங்கள் நோக்கி உலகம் பயணித்து வருவதால், ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். புதிய கல்விமுறைகளுக்கு ஆசிரியர்களும் தொடர்ந்து 'அப்டேட்' ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களாகி தினசரி கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் கற்பித்தல் சிறப்பாக இருக்கும்.ஆன்லைன் கல்விமுறை தனியார் பள்ளி வகுப்பு, மாணவர் எண்ணிக்கைக்கு சாத்தியம். ஆனால், அரசு பள்ளிகள் எனும் போது, அனைத்து பெற்றோர்களிடமும் மொபைல் போன், ஸ்மார்ட் போன் உள்ளதா என்பது கேள்விக்குறியே. மொபைல் போன் சில பிரச்னைகளை உருவாக்குகிறது. உயர்கல்வி படிப்பவர்களுக்கு வேண்டுமானாலும் ஆன்லைன் முறை கைகொடுக்கலாம். தொடக்கக்கல்வி சாத்தியம் குறைவு. புத்தக வழி கற்பித்தல் நீண்ட நாட்களுக்கு மனதில், மனனத்தில் நிற்கும். நேரம், தொலைவை குறைக்க தொழில்நுட்பமும், ஆன்லைன் மீட்டிங் அவசியம். ஆனால், கற்பித்தலுக்கு ஆன்லைன் பயனுள்ளதாக இருக்காது.

புதிய தொழில்நுட்பங்கள் கற்றுக்கொள்வது அவசியம்

பாலசுப்ரமணியம், திருப்பூர் வடக்கு வட்டாரச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி: தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பை ஒரு வழக்கமாகவே ஆசிரியர் கொண்டிருக்க வேண்டும். ஏ.ஐ., உட்பட தொழில்நுட்பங்கள் நோக்கி உலகம் பயணித்து வருவதால், ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். புதிய கல்விமுறைகளுக்கு ஆசிரியர்களும் தொடர்ந்து 'அப்டேட்' ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களாகி தினசரி கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் கற்பித்தல் சிறப்பாக இருக்கும்.ஆன்லைன் கல்விமுறை தனியார் பள்ளி வகுப்பு, மாணவர் எண்ணிக்கைக்கு சாத்தியம். ஆனால், அரசு பள்ளிகள் எனும் போது, அனைத்து பெற்றோர்களிடமும் மொபைல் போன், ஸ்மார்ட் போன் உள்ளதா என்பது கேள்விக்குறியே. மொபைல் போன் சில பிரச்னைகளை உருவாக்குகிறது. உயர்கல்வி படிப்பவர்களுக்கு வேண்டுமானாலும் ஆன்லைன் முறை கைகொடுக்கலாம். தொடக்கக்கல்வி சாத்தியம் குறைவு. புத்தக வழி கற்பித்தல் நீண்ட நாட்களுக்கு மனதில், மனனத்தில் நிற்கும். நேரம், தொலைவை குறைக்க தொழில்நுட்பமும், ஆன்லைன் மீட்டிங் அவசியம். ஆனால், கற்பித்தலுக்கு ஆன்லைன் பயனுள்ளதாக இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை