உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்கள் வருங்கால திட்டம் வகுக்க வேண்டும் சேரன் கல்லுாரி நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு அட்வைஸ்

மாணவர்கள் வருங்கால திட்டம் வகுக்க வேண்டும் சேரன் கல்லுாரி நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு அட்வைஸ்

திருப்பூர் : சேரன் கல்வி குழுமத்தினர் சார்பில், காங்கயத்தில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லுாரியில், 'தி ரைட் சாய்ஸ்' என்ற பெயரில், கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.சேரன் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் நஸீமா, வரவேற்றார். மாணவிகளின், வரவேற்பு நடனம் நடந்தது. கல்லுாரி நிர்வாக அறங்காவலர் சுரேன் பழனிசாமி, தலைமை வகித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக காவல் துறை முன்னாள் தலைவர் சைலேந்திரபாபு பேசியதாவது:ஒவ்வொருவரும் தங்களின் வருங்கால திட்டம் என்ன என்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் எடுக்கும் சில முடிவுகள், நிரந்தரமானவை. அதை சரியாக முடிவு செய்ய வேண்டும். இதனால், தவறான முடிவெடுக்க வேண்டி வரும். தன்னம்பிக்கை, தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள், தங்களின் பாதையை சரியான முறையில் வகுத்துக் கொள்ள வேண்டும். வாழத் தேவையான வருமானம் ஈட்ட வேண்டும்; அதற்கு நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும். பிடித்த துறையை தேர்ந்தெடுத்து, அதில், திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த எத்தனையோ பேர், பெரிய பொறுப்புகளில் உள்ளனர். எனவே, எங்கு படிக்கிறோம் என்பது முக்கியமல்ல; திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 33 பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த தலைமையாசிரியர் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி கல்வி புலத்தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார், பேசினார். சேரன் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் அருள்குமரன் நன்றி கூறினார். 720க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும், 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை