உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டுக்குள் வில்லங்க சாய ஆலை பைக் தேடுதல் வேட்டையில் ஷாக்

வீட்டுக்குள் வில்லங்க சாய ஆலை பைக் தேடுதல் வேட்டையில் ஷாக்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை. நேற்று அதிகாலை 3:00 மணி.மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி, வீதிகள் வாரியாக வாட்டர்மேன் கவுரிசங்கர் தண்ணீர் வினியோகம் மேற்கொண்டிருந்தார். அருகே, சாவியுடன் பைக்கை நிறுத்தியிருந்தார். திடீரென இளைஞர் ஒருவர், இந்த பைக்கை எடுத்துக்கொண்டு 'பறந்தார்'. வாட்டர்மேன் உள்ளிட்டோர் விரட்டிச் சென்றனர்.அருகில் உள்ள சத்யா காலனியில், ரேவதி தியேட்டர் அருகே உள்ள வீடு அருகே பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்த வீட்டுக்குள் இளைஞர் புகுந்தார்.விரட்டிச்சென்றவர்கள், பைக்கை மீட்டு, இளைஞரை வீட்டுக்குள் தேடிச்சென்று பிடித்தனர். இளைஞர், போதையில் இருந்ததும், தனது பைக்கை விட்டுவிட்டு, ஒரே மாதிரி இருந்த வாட்டர்மேனின் பைக்கை ஓட்டிக்கொண்டு சென்றதும் தெரியவந்தது.இங்கேதான் 'ட்விஸ்ட்'அந்த இளைஞர் சென்ற வீட்டுக்குள் 'சாம்பிள் விஞ்ச்' மூலம், துணிகளுக்குச் சாயம் தோய்க்கும் பணி நடந்தது. வீட்டு பின்புறம் ஏழு அடி ஆழ குழி வெட்டி கழிவுநீர் தேக்கப்பட்டிருந்தது.வீடு வாடகைக்கு எடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநகராட்சி குடிநீர் இணைப்பு, வீட்டுமின் இணைப்பை பயன்படுத்தி, இப்படி ஒரு முறைகேடு 'சாய ஆலை' செயல்பட்டு வந்துள்ளது. வீட்டு காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, நீராவி தயாரித்துள்ளனர். வீடுகளில் பயன்படுத்தும், வாஷிங் மெஷின்களை கொண்டு, துணிகளைக் காய வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.-----திருப்பூர், சத்யா காலனியில் சாய ஆலை செயல்பட்டு வந்த வீடு.'சாம்பிள் விஞ்ச்' மூலம் துணிகளுக்குச் சாயம் தோய்க்கும் பணி நடந்துள்ளது.வாஷிங் மெஷின் மூலம் துணிகள் காய வைக்கப்பட்டுள்ளன.சாயமேற்றுவதற்கு மாநகராட்சி குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.சாயக்கழிவுநீர் தேக்கிவைக்கப்பட்டிருந்த குழி.

குடியிருப்பு பகுதியில், முறைகேடாக சாயப்பட்டறை இயங்கியது தொடர்பாக, விசாரணை நடத்தப்படும். மின் வாரியம், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- பவன்குமார், மாநகராட்சி கமிஷனர்.

குடியிருப்பு பகுதியில், முறைகேடாக சாயப்பட்டறை இயங்கியது தொடர்பாக, விசாரணை நடத்தப்படும். மின் வாரியம், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- பவன்குமார், மாநகராட்சி கமிஷனர்.சாயக்கழிவுநீரை, நிலத்தில் தேக்கியதால், அருகேயுள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. சில மாதங்களாக, ஆழ்துளை தண்ணீர் நெடியுடன் வருவதாகவும், அதிக நுரை வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இப்படிப்பட்ட ஆலைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பசுமை ஆர்வலர்கள்.

மாநகராட்சி நிர்வாகம்தான் தடுக்க முடியும்

முறைகேடாக இயங்கும் இப்படிப்பட்ட சாய ஆலைகளால், ஒட்டுமொத்த திருப்பூருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், வீடு வீடாக சென்று கண்டுபிடிக்க முடியாது. வாடகை வருவாய்க்கு ஆசைப்பட்டு, வீடு வாடகைக்கு கொடுப்போர் தான் முக்கிய காரணம். அடுத்தாக, மாநகராட்சி நிர்வாகம்தான், குடிநீர் இணைப்பு பயன்பாடு குறித்து அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.மின்வாரியமும், மின் பயன்பாடு குறித்து, மின் கணக்கீட்டின் போது மேலாய்வு செய்து கொள்ள வேண்டும். கழிவுநீர் வெளியேற்றம், தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றை பார்த்து, மாநகராட்சி நிர்வாகம் தான், இதுபோன்ற முறைகேடாக சாய ஆலைகள் இயங்குவதை அடியோடு தடுக்க வேண்டும்.- காந்திராஜன், தலைவர், சாய ஆலை உரிமையாளர் சங்கம்.

இயங்குவது தெரியாதிருக்க

சத்தமாக சினிமா பாட்டுரஞ்சித் என்பவர், முறைகேடாக ஆலையை நடத்திவந்துள்ளார். 'விஞ்ச்' ஓடுவது வெளியே தெரியாமல் இருக்க, அதிக சத்தத்துடன் சினிமா பாடல்களை கேட்பது போல் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கவும், மேல்நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்து, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், குழி தோண்டி சாயக்கழிவுநீரை தேக்கி வைத்திருந்ததால், சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென, மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.- செந்தில்குமார், சுற்றுச்சூழல் பொறியாளர், திருப்பூர் மாவட்டம்(வடக்கு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ