குறுமைய விளையாட்டு போட்டி; எம்.எஸ்., வித்யாலயா அசத்தல்
திருப்பூர் : அவிநாசி வட்டார குறுமைய போட்டியில், எம்.எஸ்., வித்யாலயா மாணவ, மாணவியர் அசத்தியுள்ளனர்.பதிநான்கு வயது மாணவியர் பிரிவு கோ கோ, எறிபந்து, இறகுப்பந்து மற்றும் மாணவர் வளைப்பந்து போட்டியில் முதலிடம், 17 வயது மாணவியர் தனிநபர், குழு வளைப்பந்து, டேபிள் டென்னிஸ் முதலிடம், மாணவர் கோ கோ, குழு டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் தனிநபர், குழு இரண்டிலும் முதலிடம்.பத்தொன்பது வயது மாணவியர் தனிநபர், குழு முதலிடம், மாணவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர், இரட்டையர் இரண்டிலும் முதலிடத்தை இப்பள்ளி கைப்பற்றியுள்ளது. அத்துடன், இப்பள்ளி அவிநாசி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவியர்கள் பிரிவில், 130 புள்ளிகளை பெற்று முதலிடம், மாணவர்கள் பிரிவில், 90 புள்ளிகளை பெற்று மூன்றாமிடம் கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் ஸ்ரீதா, தலைமை ஆசிரியர் பிரியதர்ஷினி பாராட்டினர்.