உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பதிகங்கள் முற்றோதல்; மனமுருகிய பக்தர்கள்

திருப்பதிகங்கள் முற்றோதல்; மனமுருகிய பக்தர்கள்

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள, ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் தேவார திருப்பதிகங்கள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.திருஞானசம்பந்தர், திருவிற்கோலம் தலத்தில் அருளிய 321வது பதிகத்தில் இருந்து திருநல்லுார்ப்பெருமணத்தில் அருளிய 385வது திருப்பதிகம் வரை கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் பண்ணிசை மரபோடு முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், மனமுருகியபடி லயித்தனர்.முன்னதாக லிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் மண்டபத்தில் திருமுறை கண்ட பிள்ளையார் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திருஞானசம்பந்த சுவாமிகள், கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை கோவை அரண் பணி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.----திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் முற்றோதல் நிகழ்ச்சி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை