உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சில வரி தொடர்ச்சி...

சில வரி தொடர்ச்சி...

மாணவர்களுக்கு குறிப்பேடு (படம்1 சி) தெக்கலுார் ரோட்டரி சார்பில், காந்தி நகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குறிப்பேடு வழங்கப்பட்டது. ரோட்டரி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பங்கேற்று பேசினார். எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக குறிப்பேடு வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர் சிவகுமார், நிர்வாகிகள் சந்திரசேகர், பாரதி, நடராஜன், ஆறுச்சாமி, கோபால்சாமி, நவீன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, செடி மற்றும் மரங்களுக்கு ரோட்டரி சார்பில், சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. செயலாளர் அருள்குமார் நன்றி கூறினார். டாக்டர்களுக்கு கவுரவம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு,அவிநாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களை சந்தித்து சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினர். மாவட்ட அமைப்பாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். அணி தலைவர் செல்வராஜ், துணை அமைப்பாளர்கள் காளீஸ்வரன், வெங்கடாசலம், மூர்த்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செல்வரங்கம், வி.சி.க. நிர்வாகி மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி