உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெற்கு ரோட்டரி பள்ளி ஆண்டு விழா

தெற்கு ரோட்டரி பள்ளி ஆண்டு விழா

திருப்பூர்: திருப்பூர் டி.கே.டி., அருகேயுள்ள தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, ரோட்டரி கவர்னர் சுரேஷ்பாபு பங்கேற்றார். பள்ளி தலைவரும், திருப்பூர் மாநகராட்சி துணை மேயருமான பாலசுப்ரமணியம், பள்ளி ஆலோசகர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ஜெயபாலன், ரோட்டரி முன்னாள் கவர்னர் இளங்குமரன், தெற்கு ரோட்டரி சங்க தலைவர் மோகன சுந்தரம், பள்ளி பொருளாளர் வரதராஜ், இணை செயலாளர் கண்ணன், பள்ளி முதல்வர் பாரதி, தெற்கு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர். விழா நிறைவாக பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை