உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்பெயின் ரோட்டரி நிர்வாகிகள்மாணவர்களிடம் கலந்துரையாடல்

ஸ்பெயின் ரோட்டரி நிர்வாகிகள்மாணவர்களிடம் கலந்துரையாடல்

திருப்பூர், : ரோட்டரி அமைப்பு சர்வதேச அளவில், ரோட்டரி பிரண்ட்ஷிப் எக்ஸ்சேஞ்ச் என்ற பெயரில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ரோட்டரி அமைப்புகளின் செயல்பாடுகளை பார்வையிடுவர்.அவ்வகையில், ஸ்பெயின் நாட்டிலிருந்து ரோட்டரி கவர்னர்கள் இந்தியா வந்துள்ளனர். தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி மண்டலத்தில் அவர்கள் பயணித்தனர். திருப்பூரில் தெற்கு ரோட்டரி சார்பில் அமைத்து, பராமரிக்கப்பட்டு வரும் மின் மயானத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடு குறித்து கேட்டறிந்தனர். பல்லடம் ரோட்டில் செயல்படும், தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளியை பார்வையிட்ட அவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். முன்னதாக பள்ளி தாளாளர் ஜெயபாலன், பள்ளி முதல்வர் பாரதி ஆகியோர் அவர்களை வரவேற்றனர். பள்ளியை சிறப்பான முறையில் நடத்திவரும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர்கள், வளர்ச்சிக்கு தேவையான உதவிகளையும் மேற்கொள்ள பரிந்துரைப்பதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை