தொழிலாளர் வாரியத்தில் நாளை சிறப்பு முகாம்
திருப்பூர்: சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி கமிஷனர் செந்தில்குமரன் அறிக்கை:தொழிலாளர்களுக்கு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரிய இணையதளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் திருப்பூர் பி.என்., ரோட்டில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நாளை (1ம் தேதி) நடக்கிறது. பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதற்கான கட்டணம் ஏதுமில்லை.இணையம் சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்கள் பணி நடைபெறும் அலுவலகம் குறித்து இவ்வலுவலகத்தில் தெரிவித்தால், அவர்களின் அலுவலகத்திற்கே சென்று முகாம் அமைத்து தொழிலாளர்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.இணையம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இச்சிறப்பு பதிவு முகாமில் பங்கேற்று, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெற்று கொள்ளலாம். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம், போட்டோ -1 ஆகிய ஆவணங்களோடு ஒரு முறை கடவு சொல் அறியும் பொருட்டு ரேசன் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் அவசியம் வைத்திருக்க வேண்டும்.