ஸ்ரீஐராவதீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிேஷக விழா : வரும், 16ம் தேதி நடைபெறுகிறது
திருப்பூர்:அவிநாசி தாலுகா, பெருமாநல்லுார் அருகே உள்ளது, அபிேஷக வல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில். இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிேஷக விழா நடைபெற்று வருகிறது.விழாவில், நாளை, தொரவலுார், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாலிகை எடுத்து வருதல் நடக்கிறது; மாலை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது.வரும், 14ம் தேதி முதல் கால யாக பூஜை, 15ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, 16ம் தேதி நிறைவு கால யாக பூஜை நடக்கிறது.அதனை தொடர்ந்து, 16ம் தேதி காலை, 6:15 முதல், 7:15 மணிக்குள் பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷகம், அலங்கார பூஜை மற்றும் ஸ்ரீ அபிேஷக வல்லி உடனமர் ஸ்ரீ ஐராதீஸ்வரர் கோபுரங்கள் மற்றும் மூலஸ்தானங்கள் மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.விழாவில், கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசகம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதசாலம், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமி, சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபரர் கும்பாபிேஷகம் செய்விக்க உள்ளனர்; காலை 10:00 மணி முதல் பிரமாண்ட அன்னதானம் நடக்கிறது.கும்பாபிேஷக விழா நடக்கும் நாட்களில் தினமும் மாலை துவங்கி இரவு வரை பெருஞ்சலங்கையாட்டம், வள்ளி கும்மியயாட்டம், ஒயிலாட்டம், இன்னிசை பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, ஹிந்து அறநிலையத்துறை மற்றும் திருப்பணிக்குழு தலைவர் சோழா குழுமம் சென்னியப்பன், அறங்காவலர் மிதுன்ராம் குழுமம் ராஜூ என்கிற பழனிசாமி மற்றும் பலர் செய்து வருகின்றனர்.