பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்காக இன்று ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது.பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் கருதி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், யாகபூஜையும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். அதன்படி, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு எழுதுவோருக்கான சிறப்பு வழிபாடு இன்றும், 2ம் தேதியும் நடைபெறும்.காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாத்துமறை, மகாதீபாராதனை, மதியம் 12:00 மணிக்கு பிரசாதம் வினியோகம் நடக்கிறது.தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், வழிபாட்டில் பங்கேற்று பயன்பெறலாம் என, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.