மேலும் செய்திகள்
கணபதி கோவில் கும்பாபிேஷகம்
26-Aug-2024
உடுமலை:உடுமலை காந்திசதுக்கம், ஸ்ரீ மாலையம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.உடுமலை காந்திசதுக்கத்தில், ஸ்ரீ மாலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மற்றும் வளாகத்திலுள்ள ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ துர்க்கை அம்மன், நவக்கிரஹ சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா, 7ம், தேதி துவங்கியது.அன்று, திருமூர்த்திமலையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது; நவக்கிரக ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.நேற்று காலை இரண்டாம் கால யாகம், வேதபாராயணம், விக்னேஷ்வர பூஜைக்கு பிறகு, ராஜகோபுரம், மூலஸ்தான, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. காலை, 8:30 மணிக்கு மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
26-Aug-2024