உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் முப்பெரும் விழா மாணவர்கள் உற்சாகம்

பள்ளியில் முப்பெரும் விழா மாணவர்கள் உற்சாகம்

அவிநாசி: வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா, பணி நிறைவு பாராட்டு விழா, விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவுக்கு தலைமையாசிரியை அன்னபூரணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் அமுதா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சம்பத்குமார் வரவேற்றார்.ஆசிரியர் கருப்பசாமி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை துர்காதேவி பேசினார். பள்ளி மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அவிநாசி அறிவுச்சுடர் அறக்கட்டளை தலைவர்முத்துக்குமரன் பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ