உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர் தகுதி தேர்வு; 4 நாட்கள் நடக்கிறது

ஆசிரியர் தகுதி தேர்வு; 4 நாட்கள் நடக்கிறது

திருப்பூர்; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) நடத்தப்படும், தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வு இன்று துவங்கி வரும், 9ம் தேதி வரை, பல்லடம், திருச்சி ரோடு, கே.என்., புரம், அம்பாள் புரபஷனல் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் தேர்வு மையத்தில் நடக்கவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தேர்வர் உட்பட, 1,640 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளர், கணிணி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குனர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கென, சொல்வதை எழுதும் உதவி எழுத்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிக்க கலெக்டர் மற்றும் கல்வி அலுவலர் தலைமையில் தனித்தனியே பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.தேர்வு மையங்களில் எந்த நேரத்திலும் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தி, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை