கோவில் ஆண்டு விழா
திருப்பூர் - தாராபுரம் ரோடு, குபேரன் பிள்ளையார் நகர், சேரன் நகரில் உள்ள ஸ்ரீ அம்ச விநாயகர் கோவில் 2ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. கொடுமுடியிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்துவந்தனர். நேற்று காலை 108 சங்கு ஸ்தாபனம், சுவாமிகளுக்கு கலச ஆவாகணம் நடந்தது. ஜப ஹோமம், மஹா பூர்ணாஹூதி, அனைத்து தெய்வங்களுக்கும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், கலச அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் செய்விக்கப்பட்டது. மூலவர் ஸ்ரீ அம்ச விநாயகர், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மகாதீபாராதனையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.