உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மையத்தடுப்பு பசுமை மாயம்

மையத்தடுப்பு பசுமை மாயம்

பல்லடம்:பல்லடத்தில் இருந்து- திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சாலை நடுவே மைய தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரளிச்செடியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள், காற்றில் உள்ள கார்பன் துகள்களை தன்னகத்தே ஈர்த்து, மாசில்லா காற்றை வெளியேற்றும் தன்மை கொண்டவை.இதற்காக நெடுஞ்சாலை மைய தடுப்புகளில் அரளி செடிகள் நடப்படுகின்றன. வறட்சியைத் தாங்குவதோடு, மண் அரிப்பையும் அரளிச்செடிகள் தடுக்கும். கால்நடைகள் இவற்றின் இலைகளை உண்ணாது. ஆனால், இங்கு மையத்தடுப்புகள் முழுமையாக மூடப்பட்டு வருகின்றன. பசுமை ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அரளிச் செடிகள் நடப்பட்டால், சாலை பசுமையுடன் காணப்படுவதுடன், காற்று மாசும் தடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை