உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட மாநிலத்தவரின் ஜாலியான ேஹாலி

வட மாநிலத்தவரின் ஜாலியான ேஹாலி

திருப்பூர்; திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவர், ேஹாலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.வட மாநிலங்களில் வசிக்கும் மக்களின் பிரதான பண்டிகை ஹோலி. உ.பி., ம.பி., குஜராத், பஞ்சாப், டில்லி, ஹரியானா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தொழில் நகரமான திருப்பூரில், பல ஆயிரக்கணக்கான வட மாநில குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், நேற்று ேஹாலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.திருப்பூரில் குடும்பத்துடன் 'செட்டில்' ஆனவர்கள் உள்ளூரிலும், தொழில் நிமித்தம் பிற மாநிலங்களில் இருந்து திருப்பூர் வந்தவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றும் ேஹாலி கொண்டாடினர்.ஹோலி கொண்டாட்டம் குறித்து, திருப்பூர் பிரைம் அப்பார்ட்மென்ட் தலைவர் சைலேந்திர ஜெயின் கூறியதாவது:ம.பி., மாநிலத்தை பூர்வமாக கொண்ட நாங்கள், 25 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் வந்து 'செட்டில்' ஆகிவிட்டோம். வட மாநிலங்களில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஹோலி கொண்டாடுவர். வீதி, தெருக்கள் மற்றும் ரோடுகளில் செல்வோர் மீதெல்லாம் சாயநீரை தெளித்தும், சாயம் பூசியும் மகிழ்வர். திருப்பூரில் பலதரப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் நிலையில், எங்களது உற்சாகம் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். வண்ணப் பொடிகளை பூசி விளையாடுவது உட்பட பண்டிகை உற்சாகத்தில் கவனம், கட்டுப்பாடுடன் செயல்படுகிறோம். இருப்பினும், பிற சமுதாய மக்களும் எங்களின் பண்டிகை உற்சாகத்தை புரிந்து கொள்கின்றனர்.ேஹாலி பண்டிகை என்பது, தீபாவளி, ஆடிப்பெருக்கு போன்றதொரு உற்சாகம் தான். திருமணமாகி சென்ற பெண்கள், தங்கள் பெற்றோர் வீட்டுக்கு வருவர். அவர்களுக்கு தங்க நகை, புத்தாடை எடுத்து தருவது, வீடுகளில் உள்ள சிறியவர்கள், பெரியோரிடம் ஆசி பெறுவது என, பாரம்பரியம் மாறாமல் விழாவை கொண்டாடி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி