உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீமை கருவேல் அகற்ற உள்ளாட்சிகள் முழுவீச்சு

சீமை கருவேல் அகற்ற உள்ளாட்சிகள் முழுவீச்சு

திருப்பூர்;தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல் மரங்களை வெட்டி அகற்றும் வகையில் அரசு துறைகள் இணைந்து திட்டமிட்டு பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கோர்ட் உத்தரவையடுத்து இதற்கான பணி வேகம் எடுத்துள்ளது.ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்கள் கூறியதாவது:தமிழகம் முழுவதும் நீர் நிலைகள், பொது இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்ற நடவடிக்கை கோரி, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையில், பல்வேறு உத்தரவுகளை கோர்ட் பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், அரசு தலைமை செயலர் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் சீமைக் கருவேல் மரங்களை அகற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக மாநில அளவில் அரசு தலைமை செயலர் தலைமையில், பல்வேறு துறை அலுவலர்கள் 17 உறுப்பினர்கள் கொண்ட குழுவும், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் 11 துறை அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு இப்பணியை கண்காணிக்கும்.அனைத்து பகுதியிலும் சீமைக் கருவேல் அகற்றும் வகையில் பணி செய்து, மாதம்தோறும் இப்பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நகர்ப்புற பகுதியில் ஒரு பேரூராட்சி ஊரகப் பகுதியில் ஒரு ஊராட்சி என மாதிரி பகுதியாக தேர்வு செய்து பணியைத் துவங்கி மேற்கொள்ள வேண்டும்.நீர் நிலைகளின் கரைகள், கட்டுமானங்கள் சேதமின்றி பணி செய்தல்; மீண்டும் அவை வளராமல் தடுத்தல்; மரங்கள் அகற்றிய இடங்களில் பயன் தரும் மரக்கன்று நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் உரிய துறைகள் இணைந்து பணியாற்றவும் துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமை செயலரின் இந்த உத்தரவையடுத்து இதை நடைமுறைப்படுத்தும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் துவங்கியுள்ளன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை