உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏர் கன்னால் சுட்டு வாலிபருக்கு மிரட்டல்

ஏர் கன்னால் சுட்டு வாலிபருக்கு மிரட்டல்

பொங்கலுார்: பொங்கலுார் அருகே பெருந்தொழுவு கரியாம்பாளையத்தைச் சேர்ந்த மாயவன் மகன் வெங்கடேஷ், 19. காற்றாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தங்கையை, இவரது சகோதரரான சிவரஞ்சித்தின் நண்பர் ஆதீஸ்வரன் என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இது வெங்கடேசுக்கு பிடிக்காததால், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆதீஸ்வரன் தான் வைத்திருந்த ஏர் கன்னை எடுத்து சுட்டதில் வெங்கடேஷ் தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவிநாசி பாளையம் போலீசார் ஆதீஸ்வரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை