மேலும் செய்திகள்
மதுரையில் கட்டுமானம் பர்னிச்சர் கண்காட்சி
02-Feb-2025
திருப்பூர்; எஸ்.கே.ஆர்., ஈவன்ட்ஸ் நிறுவனம் சார்பில் 'திருப்பூர் ஷாப்பிங் திருவிழா -2025' மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, சாய்பாபா கோவில் அருகில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது. கடந்த 20ம் தேதி துவங்கிய இக்கண்காட்சி வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.கிட்ஸ் கிளப் தலைவர் மோகன் கார்த்திக், கண்காட்சியைத் திறந்துவைத்தார். கே.ஆர்.சி., ஈஸ்வரன் குத்துவிளக்கேற்றினார்.நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் அரங்கு அமைத்துள்ளன. பர்னிச்சர், வீட்டு உபயோகப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், புதிய வீடுகள் மற்றும் மனைகள் வாங்குவதற்கான அரங்குகள், உணவுக்கண்காட்சி, வாகன கண்காட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன. குழந்தைகளை குதுாகலப்படுத்த ரோபோடிக் கழுகு பறவைக் கண்காட்சி மற்றும் விளையாட்டு அரங்குகள் உள்ளன.மெஹந்தி, டாட்டூ போடலாம். மேஜிக் ேஷா நடக்கிறது. சிறப்பு சலுகையாக பழைய பர்னிச்சர் எந்த நிலையில் இருந்தாலும் எக்சேஞ்ச் செய்து, புதிய பர்னிச்சர் சலுகை விலையில் வழங்கப்படுகிறது.தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடைபெறும் என்று கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.ஆர்., ஈவன்ட்ஸ் சங்கர் நாராயணன் கூறினார்.
02-Feb-2025