இலவச காது பரிசோதனை; இன்றே கடைசி நாள்
திருப்பூர்; திருப்பூர் - அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பஸ்ஸ்டாப், கீதா பார்மசி அருகே உள்ள மெட்ஹெல்ப் காது பரிசோதனை மையத்தில், உலக செவித்திறன் தினமான மார்ச் 3ம் தேதி துவங்கப்பட்ட முகாம், இன்று நிறைவடைகிறது.இம்முகாமில் அனைத்து வயதினருக்கும் இலவச காது பரிசோதனை செய்யப்படுகிறது. பழைய காதுகேட்கும் கருவிகள் இருந்தால், அவற்றை புதிய கருவிகளாக மாற்றிக்கொள்ளும் சலுகை; புதிய காது கேட்கும் கருவி வாங்குவோருக்கு 10 முதல் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய ப்ளூடூத் மற்றும் ரீசார்ஜ் செய்யும் காது கருவிகளும் உள்ளன.மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து வயது மகளிருக்கும் இன்று ஒருநாள் மட்டும் இலவச காது பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு, 90431 77951, 99443 50949 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதன் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.