உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.35 லட்சம் மதிப்பில் 3 பள்ளிகளில் கழிப்பறை

ரூ.35 லட்சம் மதிப்பில் 3 பள்ளிகளில் கழிப்பறை

அனுப்பர்பாளையம்; திருப்பூர் பயனீர்ஸ் ரோட்டரி சங்கம், பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வாங்டுகரே ரோட்டரி ஆகியன சார்பில், கணக்கம்பாளையம், பூலுவப்பட்டி, காட்டூர் ஆகிய அரசு பள்ளிகளுக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் கழிப்பறை கட்டி கொடுக்கப்படுகிறது.இதில், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு, தனசேகர் (கவர்னர் தேர்வு) ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தனர். உதவி தலைமை ஆசிரியை சர்மிளா, ரோட்டரி தலைவர் நவீன்குமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் மற்றும் வளர்ச்சி குழு நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சவுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி