உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் வளத்துக்கு பாரம்பரிய முறை; உடுமலை விவசாயிகள் ஆர்வம் 

மண் வளத்துக்கு பாரம்பரிய முறை; உடுமலை விவசாயிகள் ஆர்வம் 

உடுமலை : மண் வளத்தை மேம்படுத்த, விளைநிலங்களில், செம்மறியாடுகளை பட்டி அமைக்கும் முறையை, உடுமலை பகுதி, விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., அமராவதி பாசனம், கிணற்று பாசன விளைநிலங்களில், தொடர்ச்சியாக, சாகுபடி மேற்கொள்வதால், மண் வளம் குறைகிறது. இதை சமாளிக்க, அதிக ரசாயன உரங்களை, பயன்படுத்தினாலும், எவ்வித பலனும் கிடைப்பதில்லை.எனவே, பாரம்பரிய முறைகளின்படி, மண் வளத்தை மேம்படுத்த, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதில், விளைநிலங்களில், செம்மறியாடுகளை கொண்டு, பட்டி அமைக்கின்றனர்.ஆடுகளை விளைநிலத்தில், அடைத்து வைப்பதால், பல்வேறு சத்துகள் மண்ணுக்கு கிடைக்கிறது. இதனால் மண்வளம் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக உடுமலை பகுதி விளைநிலங்களுக்கு, பழநி சுற்றுப்பகுதியிலிருந்து, செம்மறியாடுகள் அழைத்து வரப்பட்டு, பட்டி அமைக்கப்படுகிறது.குறிப்பாக, நெல் வயல்கள், காய்கறி பயிரிடும் கிணற்று பாசன விளைநிலங்களிலும், மானாவாரி கரிசல் நிலத்திலும், இவ்வகை பட்டி அமைத்து வருகின்றனர். இதனால், மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், உரத்துக்கான செலவும் குறைகிறது என உடுமலை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை