அங்கேரிபாளையம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர்; திருப்பூர் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அங்கேரிபாளையம் ரோட்டில் நாளை (1ம் தேதி) காலை, 7:00 மணி முதல் பரிசோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அங்கேரிபாளையம் ரோட்டிலிருந்து குமார் நகர், புஷ்பா சந்திப்பு வரும் வாகனங்கள் புதிய கமிஷனர் அலுவலகம் சந்திப்பு, குமார் நகர் சந்திப்பு, பங்களா ஸ்டாப் வழியாக புஷ்பா செல்லலாம்.அங்கேரிபாளையம் ரோட்டிலிருந்து கமிஷனர் அலுவலக சந்திப்பு வழியாக அவிநாசி ரோடு வலது புறம் திரும்ப இயலாது. குமார் நகரில் இருந்து அங்கேரிபாளையம் செல்லும் வாகனங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சந்திப்பு வழியாக, 60 அடி ரோடு, எல்.ஜி., சந்திப்பு, மருதாசலபுரம் ரோடு, டீச்சர்ஸ் காலனி முதல் வீதி அல்லது சிவன் தியேட்டர் ரோடு வழியாக அங்கேரிபாளையம் ரோட்டுக்கு செல்லலாம். இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, 94981 - 40792 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.