உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூணாறு ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கம்

மூணாறு ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கம்

உடுமலை; மழை காரணமாக, உடுமலை - மறையூர் ரோடு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டுப்பாடின்றி வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.உடுமலையிலிருந்து கேரளா மாநிலம் மூணாறு செல்லும் ரோட்டில், சின்னாறு முதல் மறையூர் வரை, 16 கி.மீ., துாரம் ரோடு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, இந்த ரோட்டில், காலை, 10:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், மழை காரணமாக, நேற்று பணிகள் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் அனுமதிக்கப்பட்டது. இன்றும், பணிகள் நடக்காது; வாகனங்கள் அனுமதிக்கப்படும். மழை தொடர்ந்தால், பணி மேற்கொள்ள முடியாது, என கேரளா பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !