உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவை - திருப்பூர் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்

கோவை - திருப்பூர் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்

திருப்பூர்;ரயில் பயணிகள் கோரிக்கையை ஏற்று, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று மதியம், 12:30 மடகான் (கோவா) புறப்படும் சிறப்பு ரயில் (எண்:01007) நாளை (7ம் தேதி) மதியம், 12:25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். முன்னதாக கோவைக்கு, 7ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கும், திருப்பூருக்கு அதிகாலை, 3:50 மணிக்கும், ஈரோட்டுக்கு, அதிகாலை 4:30 மணிக்கும் வரும். கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக பயணித்து மதியம், 12:25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வரும், 7ம் தேதி, இரவு, 11:55 மணிக்கு புறப்படும்; 8ம் தேதி இரவு, 11:00 மணிக்கு மடகான் (கோவா) சென்று சேரும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !