மேலும் செய்திகள்
ஒரு வாரத்தில் 23 பேருக்கு 'குண்டாஸ்'
13-Aug-2024
திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோட்டில் ஸ்பா ஒன்றில் கடந்த மாதம் தவறான தொழில் நடப்பதாக போலீசாருக்கு தெரிந்து தெற்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இதுதொடர்பாக ஸ்ரீரம்யா, 41 என்பவரை கைது செய்தனர். இவர் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார்.l பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ்குமார், 21. கணியாம்பூண்டியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் வேலையை முடித்து விடுதிக்கு சென்ற போது, டூவீலரில் வந்த, மூன்று பேர் அவரை கத்தி யால் குத்தி, மொபைல் போனை பறித்து சென்றனர். சிகிச்சை பலனின்றி ஆகாஷ்குமார் இறந்தார்.இந்த கொலை தொடர்பாக, ஆண்டிபட்டியை சேர்ந்த பாண்டியராஜ், 20 என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால், அவரை குண்டாசில் கைது செய்தனர். இதுவரை மாநகரில், 72 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13-Aug-2024