உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிற்சங்க ஆண்டு விழா

தொழிற்சங்க ஆண்டு விழா

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், அண்ணா தொழிற்சங்கத்தின், 50வது ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே சர்மியான் சாகிப் வீதியில், தொழிற்சங்க கொடியேற்றப்பட்டது. மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரதான் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கொடியேற்றி தொழிற்சங்கத்தினருக்கு இனிப்பு வழங்கினார். அதிக அளவு கிளை சங்கங்களை உருவாக்கி, பல்வேறு இணைப்பு சங்கங்களை தோற்றுவித்த, கவுன்சிலர் கண்ணப்பன் கவுரவிக்கப்பட்டார். முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன், தொழிற்சங்க இணை செயலாளர் ரஞ்சித்குமார், துணை செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி