உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலம்பட்டி சுங்கச்சாவடி அகற்றும் பணி இன்று துவக்கம்: போராட்டக்குழு மகிழ்ச்சி

வேலம்பட்டி சுங்கச்சாவடி அகற்றும் பணி இன்று துவக்கம்: போராட்டக்குழு மகிழ்ச்சி

பொங்கலுார்:திருப்பூர் மாவட்டம் அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை, 31.8 கி.மீ., ரோடு என்.எச்: 381 சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது.அவிநாசியில் இருந்து செட்டிபாளையம் வரை நகரப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் உள்ளது உள்ளபடி ரோடு போடப்பட்டது. இந்நிலையில், பொங்கலுார் அருகே வேலம்பட்டியில், 2018ல் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.சுங்கச்சாவடி உள்ள இடம் நீர்நிலை புறம்போக்கு என்பது குறித்து, அப்பொழுதே 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து, சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், சுங்கச்சாவடியை அகற்ற, கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், கோர்ட் உத்தரவை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதற்காக வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தப்பட்டது. தற்போது, பொங்கலுார் பி.டி.ஓ., ரொனால்டு ஷெல்டன் பெர்னாண்டஸ், வடக்கு அவிநாசி பாளையம் ஊராட்சி தலைவர் நடராஜூக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், கலெக்டர் உத்தரவின் அடிப்படையில், நாளை (இன்று) காலை, 11:00 மணிக்கு வேலம்பட்டி சுங்கச்சாவடி அகற்ற முன் ஏற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ